தமிழ்நாட்டில் வேட்பாளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருவதால் வேட்பாளர்கள் தங்களது வேட்பாளர் அட்டை விவரங்களை திருத்திக்கொள்ளலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வேட்பாளர் பட்டியல் திருத்தும் பணி நடைப்பெற்ற வருகிறது. எனவே புதிதாக தங்கள் பெயரினை சேர்க்க விரும்புவோர், பிழைகளுடன் இருக்கும் வேட்பாளர் பட்டியலை திருத்த விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இப்பணிகளை செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.


தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதன் படி., இந்த அறிவிப்பிற்கு பின்னர் (11.1.2018 முதல் 10.4.2018 வரை) சுமார் 2,74,999 பேர் பெயரை சேர்க்கவும் திருத்தவும் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக வாக்காளர் அட்டை பெற்றுள்ள வாக்காளர்களும் இந்த இணையத்தளத்தில் சென்று தங்களது தகல்களை சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.


இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்ப்பது எப்படி?


  • http://www.nvsp.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, 'Track Application Status' என்பதை தேர்வு செய்யவும்.

  • விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்ட அடையாள எண்ணை உள்ளிட வேண்டும். அந்த எண் தங்களது e-mail அல்லது சமர்பிக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.