பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கொரோன தொற்று பாதிப்பு காரணாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்த நிலையில் வரும் மே மாதம் 5ஆம் தேதி முதல் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அதன்படி, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவதற்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள், இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in -ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR