Pongal Gift: யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் உண்டு... தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவு என்ன?
TN Pongal Gift Package 2024: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Pongal Gift Package 2024 To All Ration Cardholder: பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்குவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என கடந்த ஜன.2ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பொங்கலுக்கு ரூ.1000
அதுமட்டுமின்றி, ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜன. 5ஆம் தேதி அறிவித்திருந்தார்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவை மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்த்து ஏனைய அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளை அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.
தற்போதைய உத்தரவு என்ன?
ஏற்கெனவே, ரேசன் அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 1000 ரூபாய் ரொக்கம் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன் அனைவருக்கும் 1000 ரூபாய் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு: இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ