Salem Caste Violence:  சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவண்ண கவுண்டனூர் பொடாரன்காடு பகுதியை சேர்ந்த கமலஹாசன் - ராதிகா குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான வரியையும் 47 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், அவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராஜரத்தினம், ஆனந்தராஜ், பச்சையம்மா உள்ளிட்ட பலர் ராதிகாவின் குடும்பத்தினர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் என்பதால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு அச்சுறுத்தல்களையும், இன்னல்களையும் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.


கொலை மிரட்டல்


அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு நபர்கள் குழந்தைகள் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, உணவில் மலத்தை அள்ளி வீசியும், ராதிகா மற்றும் அவரது பாட்டி சுருட்டையம்மாள் இருவரையும் சரமாரியாக தாக்கி ஆடைகளை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது - கே.எஸ்.அழகிரி


கண்டுகொள்ளாத காவல்துறை?


இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டபோது, வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தும், வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கழுத்தில் கத்தியை வைத்தும் மிரட்டி உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால், செய்வது அறியாமல் தவித்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து சங்ககிரி காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. 


சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவரிடம் புகார் தெரிவித்தும், இடத்திற்கு பட்டா வழங்க கோரியும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் எனவும், தங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் பட்டா வழங்க வேண்டும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.


ஆட்சியரிடம் சொன்னது என்ன?


மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உணவில் மலம் கலந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நடவடிக்கை எடுக்குமா அரசு?


வேங்கைவயல் விவகாரத்தில் தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வந்தாலும், அரசு தரப்பில் இதன் விசாரணையில் சுணக்கம் இருப்பதாகவும், இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள், இயக்கங்கள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக நீதி மற்றும் எல்லோருக்குமான அரசு என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் திமுக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ