போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 01:26 PM IST
  • 5 மொழிகளில் வெளியாகி உள்ள தி கேரளா ஸ்டோரி.
  • படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
  • தமிழகத்தில் சில திரையரங்கில் படம் வெளியாகி உள்ளது.
போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி! title=

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுகின்ற திரையரங்கிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.  அதில் கேரளாவில் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், பெண்களை மதமாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து இருப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் படிக்க | நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் நடக்கவில்லை என்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கண்டனம் கிளம்பியது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் கேரளாவில் வெறுப்பு பிரிவினை வாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.  இந்த படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழு நீக்கி ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், கேரளாவில் தடை செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  இதைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் 12.55 மணிக்கு திரைப்படம் வெளியிடப்படுகிறது என்கின்ற அறிவிப்பை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை வாகனங்கள் தீயணைப்பு துறை காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று திரையிடப்படுகின்ற நீ கேரளா ஸ்டோரி திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கேரள ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க வில்லை என்றால் இந்து முன்னணி சார்பில் ஓடிடி தளத்தில் அந்த திரைப்படத்தை திரையிடுவோம். இந்து மதத்தில் உள்ளவர்களை வேறு மதத்திற்கு அனுப்பும் முயற்சியை தமிழக அரசு முறையாக செய்து வருகிறது என நெல்லையில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  நெல்லை மாவட்ட இந்து முன்னணி அலுவலக திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது கண்டனத்திற்குறியது. இந்து சாமியார்களை குறித்து பேசினால் கருத்து சுதந்திரம் என திரை துறையினர் கூக்குரலிடுகின்றனர். 

ஆனால் கேரளாவில் நடந்த உணமை சம்பவத்தை நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து எடுத்த திரைபடத்தை தமிழகத்தில் தடைசெய்துள்ளது கண்டிக்கதக்கது.தமிழகத்தில் உளவுத்துறை உயரதிகாரி மத ரீதியலாக செயல்படுகிறார்.மதமாற்றம் முயற்சி குறித்து புகார் அளித்தால் எந்த நடவடிக்கைகளும் காவல் நிலையத்தில் எடுப்பதில்லை.மனு ரசிது போடபட்ட வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவதில்லை.தமிழக அரசு இந்து மாதத்தில் உள்ளவர்களை வேற்று மதத்திற்கு அனுப்புவதற்கு முறையாக செயல்படுகிறது.கேரள ஸ்டோரி திரைபடத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்து முன்னணி ஓடிடியில் திரைப்படத்தை தரையிடும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி! வைரலாகும் படங்கள்!

Trending News