சென்னை கடலில் எண்ணெய் கசிவு... கடலோர காவல் படை சொல்வது என்ன? - அதிர்ச்சி தகவல்!
Ennore Oil Waste In Sea: சென்னை எண்ணூர் முதல் காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் கசிவு உள்ளதாக கடலோர காவல் படை தகவல் வெளியிட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Ennore Oil Waste In Sea: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக புழல் ஏரி திறக்கப்பட்டு செங்குன்றம், காவாங்கரை பொசப்பு, ஆம்முல்லவாயில், S.R.F சந்திப்பு, M.F.L சந்திப்பு, சடையாங்குப்பம், சத்தியமூர்த்தி நகர், எர்ணாவூர் வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும். சென்னையில் உள்ள பகுதிகளில் மழை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலப்பதால் கடற்கரையில் எண்ணெய் படிந்து காணப்பட்டது.
இதனால் மீன்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று மீனவர்கள் கூறுகின்றனர் அங்கு உள்ள பாறைகளில் எண்ணெய் படர்ந்து காணப்பட்டது. அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தாழாங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளது. அவர்கள் முகதுவாரம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மழை வெள்ள பாதிப்புக்கு பின் டிச. 6, 7 ஆகிய தேதிகளில் சிறிய படகு மூலம் மீன் பிடிக்க மீனவர்கள் வலை விரித்த போது என்னைப் படிந்து வலையில் மீன்கள் சிக்கியும் வலையை இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
தலைமைச் செயலாளர் ஆய்வு
கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அந்தப் பகுதி மீனவர்கள் ஆளாகின்றதாக கூறினர். மழை பெய்யும் போதெல்லாம் இது போன்று மணலி, திருவெற்றியூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள எண்ணெய் கழிவுகளை பக்கிங்காம் கால்வாயில் விட்டு விடுவதாகவும் இதனால் அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதற்கு தமிழக அரசு எந்தெந்த தொழிற்சாலைகளில் இருந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுகிறது என்று ஆய்வு செய்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து கடலில் எண்ணெய் கலப்பதை தடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் இருப்பதாக எழுந்த புகார் பூதாகரமானதை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியிலும் திருவொற்றியூர் குப்பம் பகுதியிலும் எண்ணெய் கழிவுகள் கலந்த பகுதிகளை நேற்று (டிச. 10) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமையும் அவர் பார்வையிட்டார்
அறிக்கையை பொறுத்து நடவடிக்கை
இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "வெள்ள நீரில் எண்ணெய் கலந்து கடலில் கலப்பதை சிறப்பு நிபுணர் குழு அமைத்து, எண்ணெய் தன்மையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், எண்ணெய் கலந்த தண்ணீர் வீட்டிற்குள் படிந்துள்ள இடத்திற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிபுணர் குழு தரும் அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை... அதுதான் பிரச்னை... மா.சுப்பிரமணியனின் விளக்கம்
மேலும் இப்பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் அதிகமாக சூழ்ந்துள்ளதால் அதனை அகற்றும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக தான் திறந்து விடப்பட்டது. இந்த முறை அதிகப்படியான மழை பெய்ததால் வெளியில் இருந்து வரப்பட்ட தண்ணீர் கால்வாயில் கலந்து பாதிப்புகள் உண்டாக்கியது. இதற்கும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதனும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதிர்ச்சி தகவல்
அந்த வகையில், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், மழை நீரில் எண்ணெய் படலம் இல்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கடலோர காவல் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் எண்ணூர் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், எண்ணூர் முகத்துவாரம் முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் பகுதியில் எண்ணெய் படலம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதுடன், மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடலோர காவல் படை அறிக்கையின் மூலம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மறைத்த உண்மையை அம்பலமாகியுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க | ஸ்டாலின் திறந்துவைத்த பாலம்... ஆனால் எந்த பயனும் இல்லை - மௌலிவாக்கம் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ