கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை... அதுதான் பிரச்னை... மா.சுப்பிரமணியனின் விளக்கம்

Chennai Floods: அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2023, 04:47 PM IST
  • 2015 வெள்ளம் Man Made Flood என்றுதான் நாடாளுமன்றதிலேயே சொல்லப்பட்டது - மா.சுப்பிரமணியன்
  • அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் - மா.சுப்பிரமணியன்
  • மழை நீர் வடிகால் மூலம் மழை நீர் வெளியேறியது - மா.சுப்பிரமணியன்
கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை... அதுதான் பிரச்னை... மா.சுப்பிரமணியனின் விளக்கம் title=

Chennai Floods: சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (TN Minister Ma Subramanian) இன்று (டிச. 10) தொடங்கி வைத்தார். அதனை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 

அதில் பேசிய அவர்,"கடந்த டிச. 6ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று 357 இடங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

தொடரும் மருத்துவ முகாம்கள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 16516 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 443 பேர் பயனடைந்துள்ளனர். 2958 பேருக்கு காய்ச்சலும், 1620 பேருக்கு சளி இருமலும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 2 ஆயிரத்திற்கும் மேல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவனைகளிலும், மருத்துவ முகாம்களிலும் அனைத்து மழைக்கால சிகிச்சைகளுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

மேலும் படிக்க | சென்னை திட்டமிடப்படாத நகரமாகவே உள்ளது! சிங்கார சென்னையா?... எல்.முருகன் காட்டம்!

சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையிலான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. இன்று 7 தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருத்துவ முகாம்களில் பரிசோதனைகளை செய்து பயனடைய வேண்டும்" என மக்களுக்கு அவர் கோரிக்கை வைத்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், "ஜனவரியில் இருந்து தற்போது வரை 7662 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவலை தடுக்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1250 முகாம்கள் நடப்பு நிதியாண்டில் நடத்த அறிவிக்கப்பட்டது. அதில் 1083 முகாம்கள் இதுவரை  நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 76 ஆயிரத்து 832 பேர் பயனடைந்துள்ளனர்" என்றார். 

2015 Man Made Flood

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) மற்றும் மழை வெள்ளத்தால் (Chennai Floods) பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெறும் கரன்டியில் பாத்திரம் சுழற்றுவது சுலபம். 

அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயே 2015 வெள்ளத்தினை Man made flood என்று சொல்லப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும் (Edappadi Palanisamy), ஜெயகுமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை.

கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும். மழை நீர் வடிகால் (Rain Water Drainage) மூலம் மழை நீர் வெளியேறியது, ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தால் கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை. சென்னையில் எங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது என்று சொன்னால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். 

மேலும் படிக்க | குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு தொகையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News