குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(38), இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா(35), என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயபிரகாஷ் கூறி வந்த நிலையில் தன்னை விட்டு சென்று விட்டதாகவும் தனது மாமனார், மாமியார் கொடுமைபடுத்திய நிலையில் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி



இந்நிலையில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு குன்றத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  போலீஸ் நடத்திய விசாரணையில் சிறுகளத்தூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குன்றத்தூர் போலீசார் தேடி வந்த நிலையில் இருவரையும் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து மேத்தா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் மற்றும் உடன் வேலை செய்து வந்த சண்முகப்பிரியா ஆகிய இரண்டு பேரையும் கண்டு பிடித்தனர். 



இவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சண்முகப்பிரியாவை ஜெயபிரகாஷ் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பெற்றெடுத்ததும் தெரியவந்தது. மேலும் முதல் மனைவி இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், ஜெயபிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னை வரதட்சனை கொடுமை செய்ததாகவும் மேத்தா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜெயபிரகாஷ் அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் என 10 பேர்மீது குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் முதல் மனைவி இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து ஜெயபிரகாஷ் கைது செய்தனர்.


ALSO READ | கொலையில் முடிந்த வாய்த்தகராறு! கணவரே மனைவியை கொன்ற விபரீதம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR