சந்தேகத்தால் ஏற்பட்ட மனத்தாங்கலால், கணவரே மனைவியை கொன்ற விபரீதம் சோகத்தை ஏற்படுத்துகிறது. போனில் பேசினால் அது தவறா என்ற கேள்விகள் எழுந்தாலும், உண்மை சம்பவம் இது...
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே உள்ள அத்திப்பட்டி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன முனியசாமி. 36 வயதான முனிய சாமி, மனைவி கவிதா (32). 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் சின்ன முனியசாமி. மனைவி கவிதா, அத்திப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சமூக தணிக்கை ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சின்ன முனியசாமி கோவில்பட்டியில் வேலை பார்த்து வருவதால், வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார். அதன்படி நேற்று சின்ன முனியசாமி வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது, மனைவி கவிதா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததால் அதைப் பற்றி, கணவர் கேள்வி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சண்டையின் முடிவில் கவிதா, தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல முயன்றார்.
அப்போது, மீண்டும் இருவருக்குக்ம் இடையே தகராறு முற்றிய நிலையில், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத கணவர் சின்ன முனியசாமி, கவிதாவை அடித்து கீழே தள்ளினார்.
அப்போதும் கோபம் அடங்காமல், அருகில் கிடந்த கல்லை எடுத்து கவிதா தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் கவிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ALSO READ | சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..
இதுகுறித்து உடனடியாக குருவிகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவியை கொன்ற சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்த்தகராறில் கணவரே மனைவியை கொன்ற விபரீதம் சோகத்தை ஏற்படுத்துகிறது... ஆத்திரத்தால் புத்தியிழந்த தந்தையால் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் கவலையளிக்கிறது.
ALSO READ | கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR