கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான அபிசுந்தர். பள்ளிப் படிப்பை முடித்தவர், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்குத் திரும்பியவர் திடீரென்று காணாமல் போனார். நீண்ட நேரமாகியும் இரவு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அபிசுந்தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் செல்போனை எடுத்துப் பேசியிருக்கிறார். சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்போன் கிடந்ததாகவும், அங்கு அபிசுந்தர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உடனே பதறிப்போனவர்கள் செல்போன் கிடந்த இடத்திற்குச் சென்று அவரை தேடியுள்ளனர். அப்போதுதான் அந்த கொடூரம் வெளிவந்தது. ஊருக்கு மத்தியில் இருக்கும் கிணற்றில் அபிசுந்தர் சடலமாக மிதந்து கிடந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரே கூடியது. மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் குடும்பமே உடைந்து போனது. சம்பவம் குறித்து வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், கிணற்றுக்குள் இறங்கி அபிசுந்தரைன் உடலை மேலே கொண்டு வந்தனர். இதனையடுத்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இரண்டு நாட்களாக அபிசுந்தரின் மரணத்தில் நீடித்த மர்மம்.... மாற்றுப்பாதையில் மறு உருவம் எடுத்தது. ஆம், விபத்தோ. தற்கொலையோ இல்லை... கொலை.... 



மேலும் படிக்க | சினிமா பாணியில் கொலை..! போலீஸுக்கு துப்பு கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!


கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார், அபிசுந்தர். உடலில் தென்பட்ட காயங்களும் பிரேதப் பரிசோதனை முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியது. சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்தவரைக் கொலை செய்யும் அளவுக்கு என்ன பகை ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? கொலை செய்தது யார் ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு போலீசார் விடை தேட தொடங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதே ஊரைச் சேர்ந்தவர் இளையராஜா. அவருடைய மனைவிக்கும் அபிசுந்தருக்கும் நீண்ட காலமாக தாகத உறவு இருந்து வந்தது. வயதில் சிறியவர் என்பதால் அக்கா, தம்பி என்று சொல்லிக்கொண்டு இருவரும் உறவில் இருந்துள்ளனர். இதனால் ஊரில் இருப்பவர்களுக்கும் அவர்கள் மீது சந்தேகம் வராமல் போனது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுடைய தகாத பழக்கம் இளையராஜாவிற்குத் தெரியவந்தது. இருவரையும் கண்டித்தவர், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வேப்பூர் காவல் நிலையத்தில் அபிசுந்தர் மீது புகாரளித்தார். அதுதான் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய தடையம்.



இளையராஜாவை பிடித்து விசாரிக்க, மனைவியுடன் உறவில் இருந்ததால் முன்விரோதத்தில் இரண்டு வருடங்களாக ஆத்திரத்தில் சுற்றியவர், ஆட்களை வைத்துப் போட்டுத்தள்ளியதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அபிசுந்தரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர். சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி எழுதிய போலீசார், இளையராஜா, அண்ணாதுரை, பாண்டியன், மணிமேகலை, பெரியம்மாள் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஒருவர் 17 வயதே ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | காதல் கணவனால் கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட மனைவி



 


17 வயதில் பாதை மாறிப்போன உறவு இன்று அபிசுந்தரின் உயிரைக் குடித்தது. ஆதங்கமும் ஆத்திரமும் இளையராஜாவை கூண்டுக்குள் அடைத்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR