சென்னை: சாமியாராக மாறிய மனைவியை கொலை செய்த கணவன் - சிக்கியது எப்படி?
சென்னையில் மனைவியை கொலை செய்த கணவன் சாமியாராக மாறிய நிலையில் அவரை தனிப்படை காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
மனைவியை கொலை செய்த கணவன்
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 4 வயது வித்தியாசம். அதாவது கணவனை விட மனைவி வாணி நான்கு வயது மூத்தவர். இருப்பினும் மனம் ஒன்றிப்போனதால் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஹரீஷ், கௌதம் என்ற இரு மகன்களும் உள்ளனர். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், வாணியின் நடத்தை மீது கணவர் ரமேஷூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2021 ஆம் ஆண்டு திடீரென வாணியை தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார் ரமேஷ். இது குறித்து மாமியார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்ய சென்றுள்ளனர்.
சாமியாராக மாறிய கொலையாளி
மனைவியை கொலை செய்துவிட்ட ரமேஷ், இதில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். அவர் குறித்த எந்த தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஓட்டேரி காவல்துறையினர் இந்த கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ரமேஷுக்கும் சொந்த ஊரான உசிலம்பட்டி. திருப்பதி, பெங்களூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர் போன்ற ஊர்களில் அவரை தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவர் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. துப்பு துலக்கும் முயற்சியில் இருந்த காவல்துறையினருக்கு ரமேஷ் சாமியாராக மாறிவிட்டதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் மீண்டும் கொலை வழக்கை தூசி தட்டி எடுத்தனர்.
டெல்லிக்கு தப்பிச் செல்ல திட்டம்
சாமியாராக மாறிய ரமேஷ் அந்த கோலத்தில் டெல்லி தப்பிச் சென்று ஹரிஹர சுதன் ஆசிரமம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவரை காவல்துறையின் தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. காவல்துறையினர் கைது செய்யும்போது காவி உடையில் சாமியார் போல் இருந்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பத்திரப்பதிவில் சேவை கட்டணம் உயர்வு... ஜூலை 10 முதல் அமல் - மாற்றங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ