மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும், பாஜக இந்தி திணிப்பை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் அமித்ஷாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறினார். ரஹ்மானின் இந்த பதிலுக்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது.



இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் தமிழக பாஜக தெளிவாக இருக்கிறது.


இந்தியை திணிக்க முயற்சித்தால்  தமிழக பாஜக நிச்சயம் அதனை எதிர்க்கும். இந்தி திணிப்பு  முயற்சியை எந்தவிதத்திலும் தமிழக பாஜக ஏற்காது.  தாய்மொழி தமிழ்தான் நமக்கு பெருமை, இந்தியால் நமக்கு பெருமையில்லை .அந்நிய மொழியான ஆங்கிலமும் , இந்தியும் ஒன்றுதான் எனக்கு.



கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை குறைப்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருந்த இந்தியை , 2019ஆம் ஆண்டு விருப்ப மொழியாக்கியது பாஜகதான்.  


மேலும் படிக்க | தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்


பல தமிழர்கள் விருப்பப்பட்டு இந்தியை படிக்கின்றனர். அதற்கான தரவுகள் இருக்கின்றன. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருந்தால் நாங்கள் உச்சகட்ட பெருமை அடைவோம். அந்த நிலையை கொண்டுவர ஏதாவது முயற்சி எடுத்ருள்ளனரா? அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 10 தமிழ் பள்ளிகளை , தமிழக அரசின் செலவில் நடத்த முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். 



நான் இந்தி பேசமாட்டேன். ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழில்  பேசியது அனைவருக்கும் பெருமை. தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூற அவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது” என்றார். 


மேலும் படிக்க | மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்...பாஜகவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR