தமிழ்நாடுதான் பெஸ்ட்... கன்னியாகுமரியில் பிவி சிந்து!
தமிழகத்தில் வருவது மிக்க மகிழ்ச்சி என்றும் இங்கு அதிகளவில் இளைஞர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்றும் கன்னியாகுமரியில் பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் விளையாட்டு உபகரண விற்பனை மையம் திறப்புவிழா நடந்தது. இதில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்தவருமான பி.வி.சிந்து கலந்து கொண்டு விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதைதொடர்ந்து அந்த நிறுவனத்தின் சார்பில் ஆற்றூர் அருகே அமைக்கபட்டிருந்த பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பி. வி சிந்து அங்கு பயிற்சி பெறும் பேட்மிண்டன் வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து,"இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனாலும் தமிழகத்தில் வருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் அதிகளவில் இளைஞர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க | குரோஷியாவுக்கு 3ஆவது இடம்... மனங்களை வென்ற மொராக்கோ - Goodbye Modric
நான் ஒலிம்பிக் தடகள போட்டி குழுவில் உறுப்பினராக முதன்முதலாக இடம்பெற்றுளேன். அதின் தலைவராக பிரபல தடகள வீரர் பிடி உஷா செயல்படுகிறார். அவர்களோடு இணைந்து செயலாற்றுவது எனக்கு மகிவும் மகிழ்ச்சியளிக்கிறது.
எங்களுக்கு விளையாட்டை குறித்து அனைத்து நுட்பங்களும் தெரியும் என்பதால் புது யுக்திகளை ஒலிம்பிக் தேர்வுக்குழுவில் கொண்டுவந்து பின்தங்கிய வீரர்கள் உட்பட அனைத்து தரப்பு வீரர்களுக்கும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் வழங்கி ஊக்குவிப்போம்.
வரும் ஒலிம்பிக் போட்டியில் என்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன். மேலும் நாளை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் எந்த நாடு வெற்றிபெறும் என்று நான் கூற விரும்பவில்லை. இரு அணிகளுக்கும் நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அணி வெற்றிபெற்றாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ