குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள அதுல்ய மிஸ்ரா IAS அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கோர சம்பவம் தொடர்பான தெளிவான அறிக்கை மற்றும் ட்ரக்கிங் வரைமுறை படுத்துவது குறித்து அறிக்கை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 39 பேர் சென்றனர்.


கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் அக்குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் காட்டுத்தீயில் சிக்க நேர்ந்தது, இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கோர விபத்தில் இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் பலர் கவலைகிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


காட்டினுள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


இவ்விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மதுரை, சென்னை கோவை உள்பட பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்கோர சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள அதுல்ய மிஸ்ரா IAS அவர்களை நியமித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!