பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறஉலமா அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.


உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.


இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடு செய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.


உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடையதடைவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும். உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 26.10.2017 அன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.