தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளம்பரப் பலகை விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் வியகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது குடும்பத்தாரிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


விளம்பரப் பலகை விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு விஜய பிரபாகரன் இன்று சென்றார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்த அவர், இதனையடுத்து செய்தியாளர்களிடன் பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., அதிமுக விளம்பரப்பலகை விழுந்ததால் அது சர்ச்சையானது. ஒரு தனியார் பேனர் விழுந்திருந்தால் அது இந்தளவிற்கு சர்ச்சையாகி இருக்காது என்பது என கருத்து என தெரிவித்தார். விளம்பரப்பலகை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றினால் சரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும் விளம்பரப்பலகை விவகாரத்தில் நடிகர் விஜய் தெரிவித்திருக்கும் கருத்து அவருடைய சொந்தக் கருத்து எனவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


மேலும், தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 


தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி அருகில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில், முன்பு விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.