தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஜூன் மாதம் 10 ஆம் தேதி நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. இக்குழு நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்து அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தற்போது நீட் (NEET Exam) தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு (Tamil Nadu) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், (அறிக்கையின் சில முக்கிய விவரம்


ALSO READ | தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்


* நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம் என்றும் நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


* மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்டிற்கு முன்பும் பின்பும் சேர்ந்த விகிதம், தமிழ் வழி பயின்றவர்கள் சேர்ந்த விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


* 2007 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல, நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை தமிழக அரசு பெறலாம்.


* சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம்.


* நீட் தேர்வை நீக்குவதற்கானசட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளலாம்.


* மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒருசிலஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், சுகாதார கட்டமைப்புதரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம். அதோடு, மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகவும் பின்தங்கிவிடும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இது போன்று பல்வேறு அம்சங்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்பித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதனுடைய முழு அறிக்கையையும் https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21092966.pdf என்ற பக்கத்தில் காணலாம்.


ALSO READ | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR