வேலூர்: மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம். 50 லட்சத்திற்கும் மேல் பணம் முதலீடு செய்துள்ள ஐ.எஃப்.எஸ்  ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன்- இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார். 28 வயதான வினோத் குமார், வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனமான ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஊழியர் மற்றும் ஏஜென்ட் ஆக இருந்து வந்துள்ளார். மோசடி புகாரில் இவர் பணியாற்றிய நிறுவனம் சிக்கியுள்ள நிலையில், என் முடிவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும் என்று கடிதம் எழுதி கடிதத்துடன் செல்பி எடுத்த பின் உயிரை மாய்த்துக் கொண்டார் வினோத் குமார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30- க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று,மாதந்தோறும் வட்டி பணம் தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.



தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு  வட்டி பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.


மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்


நேற்று முன்தினம் (05.08.2022) அன்று தமிழகம் முழுவதும் உள்ள ifs நிதி நிறுவன அலுவலகம் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனை நடந்த நிலையில். வேலூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திற்க்கு சீல் வைத்தனர். இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜென்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | மாமூல் தராத பெண்ணை வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண் கைது


போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடிதத்தில், IFS நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கலான மோகன் பாபு, லஷ்மி நாராயணன், ஜனார்தனன், சுந்தரேசன் ஆகியோரின் PAN என்னை குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் IFS நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு இதை கண்காணிக்கும் துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.


நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது. Indoasis app enter pin 7414 எனது மொபைல் வாட்ஸ் ஆப் சேட்டில் உள்ளது. என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். Sorry to all... என்று தற்கொலை குறிப்பு எழுதி வைத்துள்ளார்.


மேலும் படிக்க | முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகத்தில் அனுசரிப்பு


அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது. போலீஸ் இவர்களை பிடித்து அனைவரின் பணத்தையும் வாங்கி தர வேண்டும். முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு, தற்கொலை செய்து கொண்ட தனியார் நிதி நிறுவன ஊழியர் மற்றும் எஜென்ட் கடிதம் எழுதியுள்ளார்.


மேலும், வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ



என் முடிவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்- கடிதம் எழுதி கடிதத்துடன் செல்பி எடுத்த பின் உயிரை மாய்த்துக் கொண்ட ஏஜென்ட்.