லஞ்சம் வாங்கிய போலீசை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

Corrupted Policeman Arrested: வழக்கை ரத்து செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2022, 02:33 PM IST
  • வழக்கை ரத்து செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்
  • கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ்காரர்
லஞ்சம் வாங்கிய போலீசை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் title=

சென்னை: வழக்கை ரத்து செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் பதிவு செய்த வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்றால் ரூபாய் 20000 லஞ்சம் கேட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையை அடுத்துள்ள கருங்காலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஹக்கீம். இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. சொத்துத் தகராறு காரணமாக  மதுரை மாவட்ட போலீசாரும் வழக்கு பதிவு செய்ததுள்ளர்.

அத்துடன் சிவகங்கை குற்றப்பிரிவு போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு குற்றத்திற்கு இரு இடங்களில் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்கிற ரீதியில் ஒரு இடத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக சிவகங்கை குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணனை, ஹக்கீம் அணுகியுள்ளார். 

மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்

அவ்வாறு பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றால் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரூ 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஹக்கீம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்தே ஹக்கீம் பணத்தை கொடுக்கும் போது போலீசார் கண்காணித்தனர்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன் மற்றும் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கும்போது ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் ரூ 20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News