இளையராஜாவுக்கு எம்.பி பதவி தேவையில்லை காரணம் இதுதான் அண்ணாமலை கருத்து
இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல தமிழக மக்களின் அன்பை பெற்றவர் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தூய்மை இந்தியா பணி தூய்மை பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு பிரியாணி வழங்கி சமபந்தி போஜனம் விழா போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பனியாளர்களுடன் அமர்ந்து சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டு மதிய உணவை அருந்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.
புத்தக வெளியீட்டு விழாவில் முன்னுரையாக இளையராஜா எழுதி இருந்த விஷயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இளையராஜா விவகாரம் பற்றி பேசிய அண்ணாமலை, அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய கூடிய கட்சிகள் இளையராஜாவைப் பற்றி பதிவுகள் வெளியிட்டனர் என்று தெரிவித்தார்.
இளையராஜாவுக்கு சொல்வதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது அவர் பாஜகவைச் சேர்ந்தவர் கிடையாது பாஜகவிற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அண்ணாமலை, திமுக ஐடி விங் இளையராஜா குறித்து தரக்குறைவான விமர்சனங்கள் செய்தனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு
சமூகநீதி பற்றி பேசக்கூடிய திமுக கட்சியோ ஒருவர் சொல்லக் கூடிய கருத்தை, தரக்குறைவான விமர்சனங்கள் செய்வது ஏன்? உங்களின் சமூக நீதி என்பது போலி சமூகநீதி என்பதை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள் என்று சாடிய அண்ணாமலை, உங்களைப் பற்றி மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக கொடுப்பதாக வெளியாகும் வதந்திகளைப் பற்றி பேசிய அண்னாமலை, பாஜகவிற்கும் குறிப்பாக ஜனாதிபதியையே தேர்ந்தெடுக்கக்கூடிய எம்பி பதவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல தமிழக மக்களின் அன்பை பெற்றவர் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி கொடுத்து, அவரை ஒரு கூட்டுக்குள் அடைக்க வேண்டாம் என்பது எனது கருத்து என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கு பதிலாக அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவபடுத்தலாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாசு மற்றும் கழிவு மேலாண்மை பற்றி பேசிய அண்ணாமலை, முதலில் 25 ஆயிரம் டன் குப்பை இந்தியாவில் உள்ள நகரங்களில் சேகரிக்கப்பட்டது. தற்போது, அதன் அளவு 1 லட்சம் டன்னாகஉயர்ந்து உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா
மத்திய அரசு இதுவரை 11 கோடியே 50 லட்சம் கழிப்பறைகளை கட்டி உள்ளது என்று கூறிய அண்ணாமலை, தமிழகம் முழுதும் தூய்மை பணியாளர்களை கவுரபடுத்தி கொண்டிருக்கிறோம் என்பதையும் பதிவு செய்தார்.
ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை சமூகநீதி நாட்களாக சமூக நீதி வாரங்களாக இந்தியா முழுவதும் பாஜக கொண்டாடி வருகிறது. இன்றைய தினம் தூய்மை பணியாளருக்கு கௌரவம் கொடுக்க வேண்டிய நாள் என்று தெரிவித்தார்.
கோடை காலத்தில் துப்புரவு பெண் பணியாளர்களுக்கு சிரமங்கள் உள்ளது கோடை காலத்திலாவது அவர்களுக்கு சேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும், துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு
மாநில ஆளுநருக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் ஒரு பாரதிய ஜனதா கட்சி கவர்னரை வரவேற்க முன்னே நிற்கும், எது ஏற்பட்டாலும் மாநிலத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்க வேண்டும்
கோவிலில் விவிஐபி தரிசனம் தடுக்க வேண்டும்
கோவிலுக்கு வரும் வருமானத்தில் மக்களுக்கு செலவு செய்திட வேண்டும் தற்போது கோடைகாலம் என்பதால் கோவிலுக்கு வெளியே நீர் மோர் பந்தல், தர்பூசணி கடைகளை திறக்க வேண்டும்
என்னைவிட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் யார் உள்ளார்கள், நானும் கருப்பு தமிழன் தான் கருப்பு திராவிடன் தான் என அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | இளையராஜாவுக்கு ஆர்.எஸ்.எஸ் குறி - பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR