இசையமைப்பாளர் இளையராஜா மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். இந்த விவகாரம் கடந்த மாதம் ஹாட் டாபிக்காக இருந்தது. இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால், தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என இளையராஜா கூறிவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சாதிய ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்தார். பெரியாரின் பேரனாக இருந்துகொண்டு சாதிய ரீதியாக இளங்கோவன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 



அதுமட்டுமின்றி பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்துக்கு தற்போது தலைவராக இருக்கும் கி. வீரமணி; இளங்கோவனின் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பலர் கூறினர்.


மேலும் படிக்க | “பெண்களின் உதிரம் கொட்டுகிறது. இந்த நாடு உருப்படாது” - ரஜினிகாந்த் பேச்சு


இந்நிலையில், பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும்  மேடையில் அமர்ந்திருந்த கி. வீரமணி உள்ளிட்டோர்மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும், உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஃபோட்டோ முக்கியம் அண்ணே: மாஸ் காட்டும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR