Vijayakanth News In Tamil: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் உடல் நலிவுற்று இருக்கும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் 'பழைய விஜயகாந்த்' ஆக வர வேண்டி, விஜயகாந்த் அவர்கள் தங்கம் குணம் உள்ளதால் தங்கம் என்பதை குறிக்கும் வகையில் "தங்கத்தாலேயே" (தங்க காசு) விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம்  வரைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னிலையில் இருக்கும்போது, புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்பட்டார், தமிழ் திரை உலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி  தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் அவர்கள் டிசார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார். 


மேலும் படிக்க - DMDK Cheif Vijayakanth Live Update: விடைபெற்றார் விஜயகாந்த்... சோகத்தில் மூழ்கிய தமிழ்நாடு


தங்க மனசுக்காரர் விஜயகாந்த்


தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் கேப்டன் அவர்கள் மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக வரவேண்டி "தங்க மனசுக்காரர்  விஜயகாந்த்" அவர்களின் உருவத்தை வரைய தங்கம் என்பது குறிக்கும் வகையில் சுமார் இரண்டு பவுன் மதிப்புள்ள 'தங்க காசை' நீர் வண்ணத்தில் தொட்டு தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை "தங்கத்தாலேயே" ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.


ஓவிய ஆசிரியர் செல்வத்துக்கு குவியும் பாராட்டு


இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை தங்கத்தாலேயே வரைந்த ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க - Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!


விஜயகாந்த் உடல் நலக்குறைவு


ஆனால் தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் இன்று காலை இயற்கை எய்தினார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் 


இதனிடையே இன்று அதிகாலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது தில், "மருத்துவ பரிசோதனையில்  விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


அதன்பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


மேலும் படிக்க - RIP Vijayakanth: கறுப்பு நிறம்.. சிரித்த முகம்... கம்பீர நடை... கணீர் குரல்..! -ஓய்வெடுங்கள் கேப்டன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ