சென்னை: சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்தது. எனவே ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தின் அடுத்த ஓரிரு மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



நாளைக்குள் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்புகளை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இரவு முழுவதும் 4000 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபடுவார்கள் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


தொடர் கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை, நவம்பர் 12)  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை நகரஏ தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பெய்து வரும் அடைமழையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.


எனவே, சென்னையில் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்ததால், ரெட் அலர்ட் எனப்படும் அபாய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 


ALSO READ சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR