சென்னை: சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பல விதங்களில் பாதித்துள்ளது அதிலும் மழைநீர் புகுந்த பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலைமை என்பது மிகவும் சோகமாகவே உள்ளது.
மகிழ்ச்சி தர கூடிய சிறப்பான நாட்களை கூட கொண்டாட முடியாமல் கனமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த லட்சுமணன் , இந்திரா தம்பதியினரின் குடும்பமும் அப்படித்தான் சோகத்தில் இருந்தனர். தங்கள் குழந்தை மோனிகாவின் முதல் பிறந்தநாளை கொண்டாட முடியாத வருத்தத்தில் இருந்த குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போலீசாரின் மனிதபிமானம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
பெருங்குடி KPK நகர் பகுதியில் மழைநீர் புகுந்தது. அதனால், அப்பகுதியில் இருந்தவர்களை மீட்ட அரசு அதிகாரிகள், அரசின் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
இந்த முகாமில் இருந்த, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த லட்சுமணன் , இந்திரா தம்பதியினரின் பெண் குழந்தை மோனிகாவிற்கு நேற்று முதல் பிறந்தநாள். ஆனால், செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.
Also Read | மயங்கிக் கிடந்தவரை மீட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இதை அறிந்த துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ், குழந்தை மோனிகாவின் பிறந்தநாளை கொண்டாட உதவி செய்திருக்கிறார். இது அனைவராலும் பாராட்டப்படுகிறது. கேக் உள்ளிட்ட பரிசுப்பொருட்களுடன் முகாமிற்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ், நவரத்தினம், சூர்யசந்திரன், முத்துகிருஷ்ணன் பெண் காவலர் பாரதி உள்ளிட்ட காவல்துறையினர் பிறந்தநாள் கொண்டாடினர்கள்.
அடாத மழை விடாது பெய்தாலும், குழந்தை மோனிகா, தனது முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட போலீசாரின் மனிதாபிமானம் உதவி செய்தது. இந்த நிகழ்ச்சியை கண்ட முகாமிலிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
தங்களது வீடு மற்றும் உடைமைகளை விட்டு, அரசு நிவாரண முகாமில் தங்கித் தவித்துக் கொண்டிருந்த மக்கள், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உதவியது.
முகாமில் இருந்த அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பூக்க உதவிய துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
READ ALSO | மழைநீரில் மிதக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை: அவதியில் நோயாளிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR