கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணிந்துள்ளது.


மேலும் படிக்க | தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?... கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


  • கொடிவேரி (ஈரோடு) 12, 

  • PWD மாக்கினாம்பட்டி, (கோவை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 8 

  • சத்தியமங்கலம் (ஈரோடு), பொள்ளாச்சி (கோவை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 6 

  • கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), சோத்துப்பாறை (தேனி) தலா 5 

  • பவானிசாகர் (ஈரோடு), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 4

  • அன்னவாசல் (புதுக்கோட்டை), குன்னூர் PTO (நீலகிரி), KCS கடவனூர் (கள்ளக்குறிச்சி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கல்லிக்குடி (மதுரை), திருமங்கலம் (மதுரை) தலா 3

  • சிதம்பரம் AWS (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கங்கவல்லி (சேலம்), குன்னூர் (நீலகிரி), மணியாச்சி (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), சங்கரிதுர்க்கம் (சேலம்), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஆழியார் (கோவை), ராசிபுரம் (நாமக்கல்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), விருதுநகர் தலா 2

  • தூத்துக்குடி, பெரியகுளம் (தேனி), அண்ணாமலை நகர் (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கிண்ணக்கொரை (நீலகிரி), கெத்தை (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), பரலியார், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சின்னக்கல்லார் (கோவை), சூரங்குடி (தூத்துக்குடி), புதுச்சத்திரம் (நாமக்கல்), நத்தம் (திண்டுக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), குந்தா பாலம் (நீலகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), காரைக்குடி (சிவகங்கை), கோத்தகிரி (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), அமராவதி அணை (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 1 பதிவாகியுள்ளது.


இதற்கிடையில் இந்த நாட்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை கூறியுள்ளது.


மேலும் படிக்க | இலவச பேருந்து பயணத்தால் பெண்களுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா?... ஆய்வில் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ