தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. எனவே வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்கப்போகிறது என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மழையின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 30ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | எம்ஜிஆர் போல் பெரும் மாற்றத்தை உருவாக்குவார் உதயநிதி - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு
மேலும் படிக்க | பிடிஆர் சிறப்பாக செயல்படுகிறார்! அமைச்சரை புகழ்ந்த மற்றொரு அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ