ஆன்மீக தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் கடற்கரை பகுதியில் புனித நீராடி முருகப் பெருமானை வழிபட்டு செல்வர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி இல்லாத நாட்களில் கடல் நீர் உள்வாங்கியது.  இதனால் கடற்கரையில் புனித நீராட வந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக வயது வித்தியாசம் இன்றி கடலில் ஆங்காங்கே வெளியே தெரிந்த பாறைகள் மீது ஏறி விளையாடியும் சிப்பிகள் சேகரித்தும் மகிழ்ந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? மாஃபா பாண்டியராஜன் சொன்ன அந்த நபர்!


இன்று வரை கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இன்று திடீரென கடலின் ஆழமானப் பகுதிகளில் காணப்படும் கடல் பாசிகள் சுமார் 1 டன் அளவில் கோயில் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின. மிகுந்த துர்நாற்றம் வீசும் இந்த கடல் பாசிகள் நிறைந்த பகுதியில் நீராடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் அரிப்பு ஏற்பட்டதாகவும் கூறப் படுகிறது.  இதனால் குடும்பத்தினருடன் நீராட வந்த பக்தர்கள் கோயில் கடற்கரை பகுதியில் நீராடாமல் அருகில் உள்ள அய்யா வைகுண்டர் கோயில் கடற்கரையில் கடல் பாசிகள் இல்லாத இல்லாத இடங்களில் நீராடினர்.



துர்நாற்றம் வீசும் கடல் பாசிகளினால் ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூரின் பெருமை பாதிக்கப் படும். எனவே உடனடியாக கோயில் நிர்வாகம் கடற்கரை பகுதியில் இருந்து கடல் பாசிகளை  அப்புறப்படுத்திட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.  பொதுவாக ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களை ஒட்டியே இதுபோன்ற கடல் பாசிகள் கரை ஒதுங்கும் என்றும், ஆனால் தற்பொழுது அதிக அளவில் இப்பாசிகள் கரை ஒதுங்கி உள்ளதால் பக்தர்கள் மத்தியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.


மேலும் படிக்க | வந்தாச்சு சென்னை டூ புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’: அப்படி என்ன சிறப்பம்சங்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ