Pensioners Identity Card Latest Updates: ஓய்வூதியர் அடையாள அட்டை குறித்துக் வெளியாகி உள்ள அறிவிப்பு என்பது எந்த வகையினை சார்ந்த ஓய்வூதியர்களுக்கு  பொருந்தும். இதற்கு எவ்வாறு வந்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த அடையாளத்தை பெற விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் போன்ற விவரங்களை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு


மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிமுறை மாற்றங்கள் சார்ந்தும் தகவல்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


டிஓடி (DoT) ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை (பென்ஷனர்ஸ் ஐடென்டிட்டி கார்டு - Pensioners Identity Card) பெற விண்ணப்பம் செய்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. 


ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை (Pensioners Identity Card) வழங்குவதாக பிஆர்.சிசிஏ (DoT தமிழ்நாடு சர்க்கிள் (Tamil Nadu Circle) அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? 


ஓய்வூதியர்கள் அனைவரும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த படிவத்துடன் இரண்டு போட்டோ அனுப்பப்பட வேண்டும்.


ஒன்று அந்த படிவத்தில் ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று தனியாக ஒரு கவரில் போட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 


இரண்டாவதாக பிபிஓ (PPO) நகல் அனுப்ப வேண்டும். 


மூன்றாவதாக ஆதார் கார்டு நகல் இணைத்து அனுப்ப வேண்டும். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கபட்டுள்ள விலாசத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிறுத்தப்படு உள்ளது. 


ஓய்வூதியர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 


டிஓடி ஓய்வூதிர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை பெற பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான அந்த மூன்று ஆவணங்களை கீழே காணக்கூடிய முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் சமர்ப்பிக்கலாம். 


ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி எது?


CCA -Pension Office Address
Deputy Controller of Communication
Accounts (Pension), DOT Cell, 
Office of Principal CCA, 
Tamil Nadu Circle, 
TNT Complex, 1st Floor, 
No-60, Ethiraj Salai, 
Egmore,
Chennai-600008.


மேலும் படிக்க - அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்


மேலும் படிக்க - Important Notice | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!


மேலும் படிக்க - DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ