TNPSC Exam News: இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் ஆதார் எண்ணை விரைவில் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு (2021) நடைபெறவுள்ள தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டது. குரூப் 1 தேர்வு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும். 856 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. 


குரூப் 1 தேர்வுக்கு விண்ணபித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டு உள்ளது. ஆனால் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும். அதாவது நிரந்தபதிவில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும். எனவே தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை விரைவில் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


ALSO READ | குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி


ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஓஎம்ஆர் தாளில் Shade செய்ய கருப்பு மை (Black Ink) மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விடைத்தாளில் உள்ள கேள்விகளுக்கு நான்கு (A,B,C,D) பதில்கள் இருக்கும். தற்போது அதனுடன் கூடுதலாக இனி E பிரிவும் இருக்கும். இந்த E பிரிவு, உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் கருப்பு மையால் Shade செய்ய வேண்டும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR