சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்தும், குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் குருப்-4 மட்டுமின்றி, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் பல குற்றசாட்டுக்கள் வெளியாகி வருகிறது. அதேநேரத்தில் பலர், இந்த சம்பவம் தொடர்பாக கைதாகியும் வருகிறார்கள். குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில் 42 பேர் மீது சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய ஆடு மேய்க்கும் தொழிலாளி உள்ளிட்ட பலர் அதீத தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்பொழுது தான் சந்தேகம் எழுந்தது. ஏதோ முறைக்கேடு நடந்துள்ளது என்பது தெளிவானது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதால், பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த சம்வத்தை கண்டித்த அரசியல் கட்சிகள், எந்தவித பாகுபாடுன்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதேபோல தேர்வு எழுதிய மற்றவர்களும் இதே கோரிக்கையை வைத்தனர். பின்னர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது முதல்கட்டமாக விசாரணை தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் முறைகேடு சம்பவம் வெளியாகி வருவதால், இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி அதிகாரி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.