COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் ( Tamil Nadu) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைதார்களுக்கு மேல் பயன்படுத்தும்  நியாய விலைக் கடைகள்  எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இவை வகைபடுத்தப்பட்டு பகுதி நேர நியாயவிலை கடைகளாக (Ration Shop)  இயங்கும்" என்றார்.


மேலும், தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்குச் சொந்த கட்டிடம் கட்டப்படும். புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும்” என்றும் அறிவித்தார்.


தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ALSO READ | Ration Card தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்யலாம்..!!


தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் இயங்க ஏதுவாக புதிய கட்டிடம் அமைக்க தேவையான முறையான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் விரைவில் ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | மக்களுக்கு சுமை வேண்டாம்! பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் ரத்து -முதல்வர் அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR