சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் தமிழகம் திரும்பியிருக்கும் சசிகலா, செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே, அவர் அளித்துள்ள பதில்களை வைத்து பார்க்கும் போது, தமிழக அரசியலில் பரபரப்புக்கு குறைவிருக்காது என தோன்றுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது முதல் செய்தியாளர் கூட்டத்திலேயே, தான் யாருக்கும் அடக்கு முறைக்கு அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் போன்ற வசனங்கள் மூலம் தான் சும்மா இருக்க போவதில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.


சசிகலா (Sasikala), பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போதே அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அமைச்சர்கள் கூறினர்.  ஆனால், இன்று காலை பெங்களூருவில் இருந்து புறப்படும் போதே சசிகலா, அதிமுக கொடி உள்ள காரில் தான் பயணித்தார். 


இந்நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என கூறிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார். 
அவர் இது எனது நிலைப்பாடு அல்ல, கட்சியின் நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டார். தினகரனும், சசிகலாவும் தி.மு.க.வின் பி டீம் தான் என  அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.


தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதனை தெரிவித்தார்.


செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா,  அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பகிரங்கமாக கூறியுள்ளார். அதேபோல் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.  தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் சசிகலா உறுதிப்பட கூறினார். இனி வரும் நாட்களில் அரசியல் பரபரப்புக்கு குறைவிருக்காது என்பதையே அவரது பதில் குறிக்கிறது..!!!


ALSO READ | அம்மா ஜெயலலிதாவின் இடத்தை நிரப்புவாரா சசிகலா சின்னம்மா? மீண்டும் சத்தியமா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR