சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி

ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வரும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2021, 07:29 AM IST
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வருகிறார்
  • ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மற்றும் அவரது உறவினர்களின் 6 சொத்துக்கள் நேற்று அரசுடமையாக்கப்பட்டன
  • தமிழக அரசியலில் பரபரப்பின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?
சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி   title=

சென்னை: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் சொத்துக்கள், அவரது உறவினர் இளவரசியின் சொத்துக்கள் என மொத்தம், ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வரும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் மற்றொரு நெருங்கிய உறவினராக டி.டி.வி தினகரன் (TTV Dhinakaran), சின்னம்மா (V K Sasikala), அம்மாவின் இடத்தை நிரப்புவார் என்று கொடி பிடித்து, சசிகலாவின் வருகையை மேள தாளங்களுடன் வரவேற்கிறார்.

ஆனால், சசிகலா விட்டுச் சென்ற அரசை சேர்ந்த அதிமுக ஆட்சியாளர்களின் கண்ணசைவு இல்லாமல், திடீரென்று சொத்து பறிமுதல் நடைபெற்றிருக்காது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Also Read | ஜெயலலிதாவின் மீட்டெடுக்க வந்த அம்மாவா சசிகலா சின்னம்மா? டிரெண்டாகும் ஹேஷ்டேக்...

ஊழல் வழக்கு தொடர்பாக சொத்து பறிமுதல் செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்று  கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பராமரிப்பது யார், அந்த சொத்தில் இருந்து வரும் வருமானத்தை யார் வசூலிப்பார்கள் என பல கேள்விகள் எழுகின்றன.

தமிழக அரசு இதற்காக ஒரு அரசு நிறுவனத்தை நியமிக்கலாம், ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை முன்மாதிரி எதுவும் இல்லை என்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த ஒரு செய்திக்குறிப்பின்படி, வாலஸ் கார்டன் முதல் தெருவில் உள்ள ஒரு சொத்து, ஆறு கிரவுண்ட் மற்றும் 1,087 சதுர அடி உள்ள நிலம். இந்த சொத்து 1994 ஏப்ரல் 28ஆம் தேதியன்று கையகப்படுத்தப்பட்டது.

Also Read | Sasikala Returns: விடுதலையைத் தொடரும் விடுகதைகள்: விடை தருமா சசிகலா வருகை?

ஒரே சாலையில் இருக்கும் மூன்று சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அந்த மூன்று சொத்துக்களுமே ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டவை, இவற்றைத் தவிர, ஆல்வார்பேட்டை பகுதியில் உள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆறு சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும். இந்த சொத்தில் சில வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  

Also Read | Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News