கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 01:51 PM IST
    1. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி.
    2. கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி! title=

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்ட போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக MLA-கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

தமிழக சட்டசபையில் விதி 110-யின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.,  "கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி (Agricultural loan) செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 16.13 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். 

முதல்வரின் இந்த அறிவிப்பினால், வங்கியில் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழக அரசு (TN Govt) பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. DMK-வினர் தேர்தலின் போது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி AIADMK தான் என்று முதல்வர் கூறினார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News