வடதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. 


பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பரவலாக மழை பெய்தால் தான், வெப்பம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், இல்லையேல், வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.