ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டவர் காசி. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக காசி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டி மீண்டும் பணம் பெறுவது என குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார் காசி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நம்பி வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சை அருகே கொடூரம்


பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த தொடர் புகாரை அடுத்து நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில்  மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காசி காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதையடுத்து காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மிக முக்கிய ஆதாரங்களைக் கொண்ட அந்த படங்களை யார் அழித்திருக்கக்கூடும் என்று விசாரிக்கையில், காசியின் தந்தை தங்கபாண்டியன் சிக்கினார். 


இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று காசியின் தந்தை தங்கபாண்டியன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசார், காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர். 


அதில், காசியின் வீட்டில் இருந்து உயர் ரக மொபைல் போனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதில் தனது மகன் தொடர்பான முக்கிய வீடியோக்களை தங்கபாண்டியன் அழித்துவிட்டதாகவும் சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது, அதில் முதல் குற்றவாளியான காசி 100க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசை வார்த்தைக் கூறியும், மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | முதலில் தங்க செயின், அடுத்து ரூ.5 லட்சம் பணம்... மாணவியை மிரட்டிய நபரை அலேக்காக தூக்கிய போலீஸ்!


மேலும் முழு மற்றும் அரை நிர்வாண படங்கள்  வீடியோக்கள் இருந்ததாகவும் அவற்றை காசியின் தந்தை அழித்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR