இன்றைய இளைய சமுதாயத்தினர், வாழ்க்கையில் சவால்களை சந்திக்க இயலாத மனநிலையில் உள்ளார்களோ என்ற அஞ்சத் தோன்றும் வகையில், அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நம்மை வருத்தமுறச் செய்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று, தமிழகத்தில் நீட் (NEET) தேர்வு அச்சம் காரணமாக, நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த, தமிழகத்தில்  கல்வி பயிலும், பிஹெச்டி மாணவி ஒருவரின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள வாளையார் பகுதியில் அமைந்துள்ளது அமிர்தா நிகர்நிலை பல்கலை கழகம், இது கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலை கழகத்தில் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் த்ற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர், எலக்ட்ர்க் வாகனத்தை சார்ஜ் செய்வதில் மேம்பாடு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். 


ALSO READ | தமிழகத்தில் 1-8ம் வகுப்புகள் எப்போது திறக்கும்; அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்


 பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த மாணவி கிருஷ்ணகுமாரி என்பவர் ஆராய்ச்சி கட்டுரைகள் முறையாக  சமர்பிக்க வில்லை என அவரது கைடாக இருந்தவர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகின்றது. இதனால், மனம் வருந்திய மாணவி கிருஷ்ணகுமாரி,  கொல்லங்கோட்டில் உள்ள  தனது வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக, நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், இந்த மரணத்திற்கு திமுக தான் காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


எந்த ஒரு பிரச்சனைக்கும்  தற்கொலை தீர்வல்ல என்பதை  மாணவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையில் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கையில், கண நேரத்தில் எடுக்கப்படும் கோழைத்தனமான முடிவு, அவர்களது தாய் தந்தையருக்கு மீளாத் துயரை கொடுத்து விடுகிறது. 


ALSO READ | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR