சென்ற வருடத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கொரோனா தொற்று பரவல், இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, இந்த மாதம் 1ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடயே பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், அதன் பின் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மேலும், சட்ட சபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், நேற்று தமிழகத்தில் நடந்த நீட் தேர்வு, கடைசி நீட் தேர்வாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற எங்களது அரசுக்கும் நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது என்றார்.
ALSO READ | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR