சென்னை: கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த நான்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில், 70 சதவிகிதம் வேகமாக பரவும், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக வந்த செய்தியை அடுத்து, அங்கிருந்து திரும்பிய ஒவ்வொரு பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது.


கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, மாநில சுகாதார செயலாளர், டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், லண்டனில் இருந்து வந்த, மதுரையைச் சேர்ந்த ஒருவர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இருவர் மற்றும் சென்னை முகபேரை சேர்ந்த ஒருவருவருக்கு கொரோனா தொற்று (Corona Virus) உறுதியாகியுள்ளது


"மதுரை நோயாளி நவம்பர் 28 அன்று தமிழகம் திரும்பி வந்தார், தஞ்சாவூரிலிருந்து இருவர் டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லி வழியாக தமிழகம் திரும்பினர், சென்னை நோயாளி டிசம்பர் 17 அன்று தமிழகம் திரும்பி வந்தார்," என்று அவர் கூறினார்.


இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு (Tamil Nadu) திரும்பிய மொத்தம் 2390 பேர் தொடர்பான தகவல்களை சுகாதாரத் துறை சேகரித்துள்ளது. இவர்களில் 1126 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.


கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும்,  அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார். 


லண்டன் பயண வரலாறு கொண்ட நோயாளிகள் ஒரு தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்ற COVID-19 நோயாளிகளுடன்  தங்க வைக்கப்படவில்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார். "மரபணு பகுப்பாய்வுக்காக நோயாளிகளின் சளி மாதிரிகளை நாங்கள் புனேவுக்கு அனுப்பியுள்ளோம், முடிவுகள் வருவதற்காக காத்திருக்கின்றோம்," என்றும் அவர் கூறினார்.


“புதிய உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம். புதிய உருமாறிய கொரோனாவின் தீவிரம் அல்லது நோய்க்கிருமியின் தன்மை குறித்த ஆராய்ச்சி தரவு எங்களிடம் இல்லை. இதுவரை, உருமாறிய புதிய கொரோனா மிக வேகமாக பரவுகிறது என்ற தகவல் மட்டுமே உள்ளது, ”என்று ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.


ALSO READ | உலகளாவிய கவனத்தை ஈர்த்த இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி: ICMR