தமிழகத்தில் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் அதே நேரம், பொருளாதாரத்திலும் தனது பங்கிற்கு மோசமாக்கி வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் தான் கச்சா எண்ணெய் விலை. வரலாற்றில் முதன் முறையாக பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே, கச்சா எண்ணெய் விலையானது சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளதே என்றும் கூறப்படுகிறது. இது எரிபொருள் துறையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் இத்தகைய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றது.


எனினும் தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரையில், அதே அளவு தாக்கம் இல்லாவிட்டாலும், நிச்சயம் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்கள் லாக்டவுன் முதல் முறையாக செய்யப்பட்டபோதே தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. எனினும் மே 3 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், ஏப்ரல் 20 முதல் சில துறைகளுக்கு சற்று தளர்வு அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியது.


அதாவது ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து தங்களது சேவையினை தொடரலாம் என்று கூறின. ஆனால் மாநில அரசுகளோ மக்கள் நலன் கருதி, ஐடி ஊழியர்களை இன்னும் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன. இதை தொடர்ந்து, சென்னையிலும் கொரொனா வைரஸ் தொற்று உடையவர்களின் எண்ணிக்கை ஆகிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.