நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield)  தடுப்பூசியுடன் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று, தமிழகத்திற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது. நேற்று  புனேயிலிருந்திலிருந்து 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.


கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. 


ALSO READ | COVID-19 Update: இன்று 1,830 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 24 பேர் உயிரிழப்பு


கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,830 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக 24 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID-19) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 177 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 135 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே அச்சத்தை போக்கி உள்ளது.


ALSO READ | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR