Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?

அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலேயோ SARS-CoV-2 நோய்த்தொற்று ஏற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒன்பது மாதம் வரை உடலில் ஆண்டிபாடிக்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 21, 2021, 07:16 PM IST
  • கொரோனா ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?
  • ஆய்வு தெரிவிக்கும் ஆச்சரியமான முடிவுகள்
  • ஆளுக்கு ஆள் ஆன்டிபாடி அளவுகள் மாறுபடுகின்றன
Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?   title=

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஒரு முறை கோவிட் நோய் ஏற்பட்டு குணமாகிவிட்டால், நோய்க்கு எதிராக உடலில் உருவாகும் ஆண்டிபாடிக்கள் எத்தனை நாட்கள் வரை உடலில் இருந்து மீண்டும் கொரோனா பாதிக்காமல் காப்பாற்றும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

ஆண்டிபாடிக்கள் என்றால் என்ன? நோய்க்கூறு உடலில் நுழைந்துவிட்டால், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் போதுமானதாக இல்லாதபோது நோயை எதிர்த்துப் போராடுவதற்காக, உடலே, ஆன்டிபாடிகளை உருவாகும்.

இத்தாலியின் நகரம் ஒன்றில் வசிக்கும் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு பிறகு உடலில் ஏற்படும் ஆண்டிபாடிக்கள் குறித்த ஆச்சரியமான தகவல் தெரியவந்துள்ளது.

அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலேயோ SARS-CoV-2 நோய்த்தொற்று ஏற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. அதிலும் இத்தாலியின் ஒரே நகரத்தை சேர்ந்தவர்களிடயே நடத்தப்பட்ட ஆய்வு இது என்பதால் இதன் துல்லியத் தன்மை அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Also Read | Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்

அந்த ஆய்வின்படி, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒன்பது மாதம் வரை உடலில் ஆண்டிபாடிக்கள் இருக்கும்.

படுவா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (University of Padua and Imperial College London) ஆராய்ச்சியாளர்கள் 2020 பிப்ரவரி / மார்ச் மாதங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இத்தாலியின் வோ (Vo) என்ற நகரில் வசிக்கும் 3000 பேரில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடையே இந்த சோதனை நடத்தப்பட்டது.  COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளான அவர்களிடம் மீண்டும் 2020 மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஆண்டிபாடி சோதனைகளை நடத்தினர்.

பிப்ரவரி / மார்ச் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98.8 சதவிகித மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பரிசோதனை செய்தபோது, அப்போதும் அவர்கள் உடலில் ஆண்டிபாடிக்கள் இருந்தன.

அறிகுறிகள் தென்பட்டு கொரோனா வைரஸ் பாதித்தவர்களும், அறிகுறி ஏதும் இல்லாமலேயே கோவிடால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நேச்சர் கம்யூனிகேஷன் மருத்துவ சஞ்சிகையில் (Nature Communications) ஆய்வு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

Also Read | கொரோனா 3வது அலை எப்போது; ICMR கூறுவது என்ன
 
ஆனால் ஆளுக்கு ஆள் ஆன்டிபாடி அளவுகள் மாறுபடுகின்றன, சில நேரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இதன் பொருள் ஆண்டிபாடிக்கள் சுமார் ஒன்பது மாதம் வரை உடலில் இருக்கலாம் என்றாலும் அதன் அளவு மாறுபடும்.

பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று பலருக்கு தொற்றவில்லை. அதாவது பிறருக்கு பரவவில்லை. சிலருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு தான் பலருக்கு பரவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது, நோய்த்தொற்றுடைய ஒருவர் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைக் காட்டுகிறது.

தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக்கு மனிதர்களின் செயலே அடிப்படையாக அமைவதாக கூறும் இந்த ஆராய்ச்சி, உடல் ரீதியான தொலைவு அதாவது ஒருவர் மற்றவருடன் கடைபிடிக்கும் சமூக இடைவெளி முக்கியமானது என்கிறது.

பிறருடன் கொள்ளும் தொடர்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவும்.

Read Also | கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News