திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த மாவட்ட மாநாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த கூட்டத்தில் "108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்திவரும் தனியார் நிர்வாகம், தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக செயற்கையாக ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி 108 ஆம்புலன்ஸ் சேவையை இரவு நேரத்தில் நிறுத்தம் செய்யும் நிகழ்வை தடுத்திட வேண்டும். மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் படிக்க | கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்


108 ஆம்புலன்ஸ் சேவையில் பெண் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, ஓவர்டைம் ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும்." உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதனை தொடர்ந்து பேட்டியளித்த மாநில பொதுச்செயலாளர்  ராஜேந்திரன், "2008 ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை  தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 1300 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இரவு நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தம் செய்யும் அவல நிலை நிலவி வருகிறது.


இதனால் இரவு நேர ஆன்லைன் சேவை இல்லாததால் உயிர் இழப்புகளும் ஏற்படும் நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் இரவு நேரத்தில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.


24 மணி நேரமும் அனைத்து 108 வாகனமும் செயல்பட மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் தனியார் நிர்வாகம் நடத்தி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 


இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்" என அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - ரஜினி - ஆளுநர் சந்திப்பை விளாசிய கே.பாலகிருஷ்ணன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ