அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - ரஜினி - ஆளுநர் சந்திப்பை விளாசிய கே.பாலகிருஷ்ணன்

ஆளுநருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   

Written by - Chithira Rekha | Last Updated : Aug 9, 2022, 02:42 PM IST
  • தமிழக ஆளுநர் - ரஜினிகாந்த் சந்திப்பு
  • கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
  • அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை எனக் கேள்வி
அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - ரஜினி - ஆளுநர் சந்திப்பை விளாசிய கே.பாலகிருஷ்ணன் title=

ஆளுநருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. 

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இருவரும் அரசியல் குறித்து விவாதித்ததாக  கருத்து தெரிவித்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.

மேலும் படிக்க | ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. 

இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?! எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News