திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு; கனிமொழி துணை பொதுச்செயலாளர்... உடன் பிறப்புகள் உற்சாகம்
இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய, பேரூர், கழக, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 4100 பேர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் நடந்த 15ஆவது திமுக கழக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஒப்புதல் பெறப்பட்டது . பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
அதேபோல், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஒதுங்கியதை அடுத்து அப்பதவிக்கு கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் திமுகவின் மகளிரணி செயலாளராக இருந்தவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் வாழ்த்தி பொன்.முத்துராமலிங்கம், பொங்கலூர் பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆற்காடு மட்டன் பிரியாணி, பலாக்காய் பிரியாணி, விருதுநகர் பரோட்டா என சைவ, அசைவ வகைகளில் விதவிதமாக தயார் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ஓபிஎஸ் அணிக்கு ஜம்ப் அடித்த எடப்பாடி அணியின் முக்கிய புள்ளி
இதேபோல் சைவ பிரியர்களுக்கு திருவையாறு அசோகா , கேரளா பாலாடை , ஆனியன் மசாலா வடை , ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ் , வெள்ளரி கேரட் மாதுளம் தயிர் பச்சடி , உருளை பட்டாணி காரக்கறி, சப்பாத்தி, விருதுநகர் ஆனியன் பரோட்டா, நவரத்தின வெஜ் குருமா ,கடலைக்கறி , வெஜ் சால்னா உள்ளிட்ட உணவுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ