அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்ததில் இருந்து உட்சக்கட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொதுச்செயாலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், கட்சியின் முழுக்கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. நீதிமன்ற படிகள் ஏறும் சூழலே இருந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்ந்தீமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் ஓ.பிஎஸ். அதிமுக அலுவலக சாவியும் இப்போது எடப்பாடி வசமே இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்ககோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மனு அங்கு பரிசீலனையில் உள்ளது. அதேநேரத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவும், ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதை பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் யார்? என்பது முடிவு செய்யப்படும். இரு அணிகளும் தங்களின் டெல்லி லாபியை தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆனால், டெல்லி மேலிடம் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கும்போது, எடப்பாடி அணி தயாராக இல்லை என்பதால் டெல்லி மேலிடம் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக விவகாரத்தை பார்த்துக் கொள்ளலாம் என இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி லாபி இப்படி இருப்பதும்கூட ஓபிஎஸ்ஸூக்கு சாதகமானதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த மைத்ரேயன், திடீரென ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார். தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவளித்த அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்து திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் அணிக்கே திரும்பியிருக்கும் அவர், ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என அதிரடியாக பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தனக்கு புத்தி பேதலித்துபோய் எடப்பாடிக்கு ஆதரவளித்துவிட்டதாகவும், இப்போது மீண்டும் ஓபிஎஸ்ஸூக்கு துணையாக இருப்பேன். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என்னை அழைத்து நலம் விசாரித்தவர் ஓபிஎஸ் என மனம் நெகிழ்ந்துபோய் பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.
மேலும் படிக்க | ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ