சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகையில் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டு புதிய அமைச்சரவை அமையும் வரை முதல்-அமைச்சர் பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 


அதன்பின்னர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். 


இதற்கிடையே ஆளுநரை சந்தித்த சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரி, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். 


இதனிடையே, ஆளுநரிடமிருந்து பதவியேற்பு குறித்த எந்த தகவலும் வராத காரணத்தால் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.