வருமானவரி சோதனை நிறைவு... நடிகர் விஜய்யின் வீட்டில் ஒரு ரூபாய் கூட முறைகேடாக சிக்கவில்லை
நேற்று நடிகர் விஜய்யிடம் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. விஜய் வீட்டில் இருந்து ஒரு ஆவணம் கூட கைப்பற்றப்பட்டவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
சென்னை: நேற்று முதல் நடிகர் விஜய்யிடம் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இரண்டு நாளாக நடைபெற்ற சோதனையில் விஜய் வீட்டில் இருந்து ஒரு ஆவணம் கூட கைப்பற்றப்பட்டவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. மேலும் பிகில் படத்திற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்து நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சினிமா வட்டாரங்கள் இது விஜய்யை பழிவாங்கும் செயல் என்றும், சமீப காலமாக நடிகர் விஜய் தனது பட ஆடியோ நிகழ்ச்சிகளில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால் தான் இந்த வருமான வரித்துறை ரெய்டு என்று கூறுகின்றனர்.
விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குபவர்கள் இருக்கும் போது, அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தாமல், விஜய்யை மட்டுமே குறிவைத்து ரெய்டு நடத்திருப்பது, அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதும், அவர் அரசியலுக்கு வந்துருவாரோன்ற பயத்துல, அவர பயப்படுத்த பாக்குராங்க என சீமான் குற்றம் சாட்டினார்.
அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் தான் இந்த ரெய்டு குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக, கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடிகர், தயாரிப்பாளர், கடன் அளித்தவர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என அவர்களுக்கு சொந்தமான 38 இடங்கல் என பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கிடைத்த ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தனது அறிக்கையில் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முதல் சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் மற்றும் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 38 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனை குறித்து தற்போது வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் சொந்தமான வீடு, அலுவலகம், சினிமா நிறுவனம் மற்றும் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்பட இடங்களில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை நடைபெற்ற 38 இடங்களில் இருந்து கைப்பற்றிய ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.