சென்னை: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களில் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ சுவிசேஷகர் பால் தினகரன் மற்றும் ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அவரது கிறிஸ்தவ மிஷனரி அமைப்புடன் தொடர்புடைய 28 இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை மேற்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ (Christianity) மதத்தைப் போதிக்கும் சுவிசேஷகர் பால் தினகரன் நடத்தும் ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பு உட்பட பால் தினகரனுடன் தொடர்புடைய 28 வளாகங்களில் புதன்கிழமை வருமான வரி அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்திலும் சோதனைகள் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதன்கிழமை காலை சென்னை (Chennai), கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். அவரது கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படும் காருண்யா கிறிஸ்தவ பள்ளியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.



ALSO READ: சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?


சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் 200 -க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை (Income Tax Department) அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.


மத போதகரின் வீடு மற்றும் அலுவலகங்களில் பல மணி நேரம் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சில பகுதிகளில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.


தினகரன் மற்றும் ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்புக்கு எதிராக வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த வருமான வரிச்சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரி ஏய்ப்பு (Tax Evasion) மட்டுமின்றி, ‘ஜீசஸ் கால்ஸ்’ அமைப்பு தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளின் விவரங்களையும் முழுமையாக வெளியிடவில்லை என்றும் பல முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


மறைந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் டி.ஜி.எஸ் தினகரனின் மகனான பால் தினகரன், தமிழகத்தில் கிறிஸ்தவர்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள பிரபலமாவார். இவர் பல அமைப்புகளையும் நடத்தி வருகிறார்.


ALSO READ: ‘சசிகலாவுக்கு AIADMK-வில் இடம் இல்லை’: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR