IND vs Eng: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது.
புதுடெல்லி: பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விளையாடு மைதானங்களில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதிக்கப்படும் என்ற அரசு அறிவிப்பைக் கருத்தில் கொண்டு இந்த ம்டிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சென்னையில் உள்ள நிலைமைகள் ஒத்திருப்பதால் ஆங்கில கிரிக்கெட் வீரர்கள் இந்த சூழலுக்கு தங்களை பொருத்திக்கொள்வது கடினமாக இருக்காது என்று இங்கிலாந்து வீரர்கள் கருதுகின்றனர்.
ALSO READ: Kieron Pollard நல்லாதான் இருக்காரு: Viral ஆன ‘Kieron Pollard Death’ செய்தி, வெறியான fans
ரவிசந்திரன் அஸ்வினின் (Ravichandran Ashwin) அதிரடியான அச்சுறுத்தலைப் பற்றி சில நாட்களுக்கு முன்னதாக பேசிய இங்கிலாந்து அணியின் புட்சர், இரு தரப்பினரும் ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இல்லாதது சரிசமமான வாய்ப்பை வழங்கும் என்றார்.
இந்தியாவில் போட்டி நடைபெறுவதால், இந்தியாவிற்கு நிலைமை சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அதிகப்படியான நம்பிக்கையுடன் இருக்கும். விராட் கோலி (Virat Kohli), ஜஸ்பிரீத் பும்ரா, மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் திரும்பி அணியில் சேருவதால் அணியின் வலு கூடியுள்ளது.
ALSO READ: Pakistan கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்யும் ICC
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR